ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் தாமதப்படுத்துவது தொடர்பாக அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தங்கள் நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் விநியோகித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் புகார் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்க வேண்டிய 5 கோடி தடுப்பூசிகளை, மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் வழங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
மேலும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபேல் ஜப்ராலி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அப்போது அஸ்ட்ராசெனகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை விரைந்து வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் எடுத்துவருவதாகத் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.