கொங்கோ எரிமலை வெடிப்பினால் 400 000க்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு

0
323
Article Top Ad

 

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எரிமலை இரண்டாவது முறையாகவும் வெடித்துச்சிதறலாம் என கொங்கோ அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மக்கள் கோமா நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். தாயொருவர் தனது பிள்ளைகளுடன் கால்நடையாக வெளியேறும் காட்சி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் உள்ள உலகின் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான நிரக்கொங்கோ (Nyiragongo)சில தினங்களுக்கு முன்பாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது.

எரிமலையிலிருந்து வௌியேறும் லாவா குழம்புகள் அருகில் உள்ள Goma நகருக்குள் புகுந்துள்ளது.

இதன் காரணமாக உருவான நச்சுப் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 32 பேர் பலியாகியுள்ளனர். 172 குழந்தைகள் உட்பட பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை இரண்டாவது தடவையாகவும் வெடித்துச் சிதறலாம் என கொங்கோ அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்து மக்களை வெளியேறுமாறு கோரியுள்ள நிலையில்400,000 ற்கும் அதிகமானவர்கள் அந்த நகரில் இருந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

காணாமற்போனவர்களில் பலர் எரிமலைக் குழம்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எரிமலை பாதிப்பால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அண்டைய நாடான ருவாண்டாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், எரிமலை பகுதியில் நேற்று (27) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனால் Goma  நகரில் உள்ள அனைவரையும் அங்கிருந்து வௌியேற்றுமாறு கொங்கோ அரவு உத்தரவிட்டுள்ளது.

அங்கு 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அங்கிருந்து வௌியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.