மன்செஸ்டர் யுனைடற் கழகத்தில் ரொனால்டோவின் சம்பளம் ஒருவாரத்திற்கு 15 கோடியை விட அதிகம்!

0
262
Article Top Ad

இத்தாலியின் யுவென்டஸ் கழகத்தில் இருந்து இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடற் கழகத்தில் இணைந்துள்ள பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாரந்தோறும் 560,000 ஸ்டேர்லிங் பவுண்கள் அதாவது 15 கோடியே 3 7 லட்சம் ரூபாவை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்செஸ்டர் யுனைடற் கழகத்துடனான இரண்டுவருட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விபரம் என இதனை டெலிகிராப் ஸ்போர்ட் தெரிவித்திருந்தாலும் எதனை அடிப்படையாகக்கொண்டதென்ற விபரத்தை வெளியிடவில்லை.

போர்த்துக்கல் நாட்டவரான ரொனோல்டோவை தமது கழகத்திற்கு வாங்குவதற்கான இணக்கத்தை ஜுவென்டஸ் கழகத்துடன் ஏற்படுத்திவிட்டதாக மன்செஸ்டர் யுடைனடற் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்த உடன்படிக்கையின் பெறுமதி 19.7 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்களாகும்

இதில் ஆரம்பகட்டமாக ஜுவென்டஸ் கழகத்திற்கு 12.85 ஸ்டேர்லிங் பவுண்ட்களை மன்செஸ்டர் யுனைடற் கழகம் வழங்கும் இதற்கு மேலதீகமாக கழகத்தினதும் வீரரதும் ஆற்றல்வெளிப்பாட்டிற்கு அமைவாக ரொனால்டோவிற்கு 6.85 மில்லியன் பவுண்ட்களை வழங்கும்.

2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆறுவருடங்கள் மஸ்செஸ்டர் யுனைடற் கழகத்திற்காக விளையாடிய பின்னர் ஸ்பெயினின் ரியல்மட்ரிட் கழகத்திற்கு மாறிய ரொனால்டோ அங்கு 9வருடகாலம் விளையாடினார் .

அதன்பின்னர் 2018ல் ஜுவென்டஸில் இணைந்த ரொனால்டோ கடந்த மூன்று வருடங்களாக அங்கு விளையாடிய நிலையில் கடந்த வாரம் சற்றுமே எதிர்பாராத வகையில் 12 ஆண்டு இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் மன்செஸ்டர் யுனைடற் கழகத்தில் இணைவதான அறிவிப்பு வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ததை அடுத்த மன்செஸ்டர் யுனைடற் கழகத்தின் பங்கு மதிப்பு உடனே 5.8 சதவீதத்தால் அதிகரித்தது.

மீண்டும் மன்செஸ்டர் யுனைடற் கழத்தில் இணைந்த ரொனால்டோ அக்கழகத்திற்காக நடப்பு பருவகாலத்திற்கான முதலாவது போட்டியாக எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி நியுகாஸில் யுனைடற் கழகத்திற்கு எதிரான போட்டியில் கழமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்செஸ்டர் யுனைடற் கழகத்திற்காக முதலாவது முறையாக விளையாடிய காலத்தில் 292 போட்டிகளில் பங்கேற்றிருந்த ரொனால்டோ 118 கோல்களை அடித்திருந்தார் . இதன்போது அக்கழகம் மூன்று முறை பிரிமியர் லீக் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.