T20 உலகக்கிண்ண இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

0
406
Article Top Ad

T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஒக்டோபர்  17ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதி  வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது வீரர்களை பட்டியலை வெளியிட்டுவிட்டது.

இந்நிலையில் இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய அணி அறிவிப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்காக அணியை இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். வீரர்களுக்கு இடையேயும் பல்வேறு போட்டிகள் இருந்து வந்தன. இந்நிலையில் பெரும் குழப்பங்களுக்கு இடையேயும், எதிர்பார்ப்புகளுக்கு இடையேயும் 15 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

மேலும் 3 ரிசர்வ் ப்ளேயர்களையும் அறிவித்துள்ளது. தமிழக வீரர்கள் அதன்படி இந்த மிகப்பெரும் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணி சமீபத்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அஸ்வின் விலக்கி வைக்கப்பட்டிருந்தார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுள்ளது. இதனால் அவர் உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ சர்ஃபரைஸ் கொடுத்துள்ளது.

உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களிலும்இ தோனி போன்ற பெரும் வீரர்களுடன் இருந்த அனுபவமும் அஸ்வினுக்கு இருக்கும் என்பது அவரை சேர்த்ததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வருண் சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து தவறவிட்டு வந்த வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் தான் உடற்தகுதியை நிரூபித்து வாய்ப்பு பெற்றார். எனவே டி20 உலகக்கோப்பையில் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

வாஷிங்டன் சுந்தர் ஏன் இல்லை?

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வந்தவர் வாஷிங்டன் சுந்தர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. எனவே அவர் அதற்காக சிகிச்சை பெற்று வருவதால்இ அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.