உலகிலேயே அதிக காற்று மாசுள்ள நகரம் அறிவிப்பு

0
299
Article Top Ad

உலகிலேயே அதிக காற்று மாசுள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்றை மாசுபடுத்தும் தூசு துகள்கள் அதிக அளவில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை குறிக்கும் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index data) கடந்தவாரம் வெளியிடப்பட்டது.

லாகூரில் காற்றின் தரக் குறியீட்டு எண் 500-க்கு மேல் தொடர்ந்து 4 ஆவது நாளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரம் லாகூரில் காற்றின் தரக்குறியீடு 700-ஐ கடந்துள்ளது.

காற்று மாசு தொடர்பாக பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் சார்பில் காற்று மாசுபாட்டைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.