சீனாவின் கடன் பொறி நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உகாண்டா விரைவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே சர்வதேச விமான நிலையம், சீனா கையகப்படுத்தும் அபாயத்தில் உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி), 207 மில்லியன் டொலர்களை விநியோகத்தின் போது 2 சதவீத வட்டி வீதத்தில் உகண்டாவிற்கு வழங்கியது.
என்டெபே விமான நிலையத்தின் மேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கடனில், 20 வருட திருப்பிச் செலுத்தும் அட்டவணை மற்றும் ஏழு வருட கால அவகாசம் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசாங்கம் திணறி வருவதால், என்டெபே சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற உகாண்டா சொத்துக்கள் சீனா வசம் செல்லும் அபாயம் உள்ளது.
இதனிடையே ஜனாதிபதி யோவேரி முசெவேனி ஒரு தூதுக்குழுவை பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிகாரிகள் ஒப்பந்தத்தின் ஆரம்ப அளவுருக்களில் எந்த மாற்றத்தையும் ஏற்க மறுத்ததால் இந்த விஜயம் பயனற்று போனது.
உகாண்டாவின் நிதியமைச்சர் மதியா கசைஜா, கடந்த வாரம் 207 மில்லியன் டொலர்கள் கடனை தவறாகக் கையாண்டதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.