Article Top Ad
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அபுதாபியில் நடைபெற்ற 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்தபோதே, இருவருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
பொருளாதாரத்துறையில் ஒத்துழைப்பு, கலாசாரம் மற்றும் மக்களுக்கிடையிலான முன்முயற்சிகள் மற்றும் பிராந்திய நிறுவனங்களில் கூட்டு முயற்சிகள் ஆகியன தொடர்பில் குறிப்பாகக் கலந்துரையாடப்பட்டது என இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.