பி.பி. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி கோட்டா

0
222
Article Top Ad

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களினால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் இராஜினாமாவை கையளித்திருந்தார்.

தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை விவரித்து, மூன்று அல்லது நான்கு பக்கங்கள் கொண்ட இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்திருந்தார்.