120,000 இலங்கையர்கள் 2021இல் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்!

0
233
Article Top Ad

2021ஆம் ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 30,000 பேர் கட்டாருக்கும் 27,000 பேர் சவுதி அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் 1,400 பேர் தென் கொரியாவுக்கும் 1,100 பேர் சிங்கப்பூருக்கும் 1,600 பேர் சைப்ரஸுக்கும் 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.