மக்களின் நன்மை அறிந்து ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்! – சு.க. வலியுறுத்து

0
198
Article Top Ad

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியதாவது:-

“நாம் மக்களின் தேவையறிந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால், மக்கள் எமக்கு எதிராக ஹூ சத்தம் எழுப்பமாட்டார்கள்.

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயுவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். மறுபுறத்தில் காஸ் வெடிப்பும் இடம்பெறுகின்றது.

இவற்றுக்குத் தீர்வு வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.
……….