நொவாக் ஜோகோவிச் டிசம்பர் 16ல் கொரோனா தொற்றுக்குள்ளானதாலேயே தடுப்பூசி அடிப்பதில் இருந்து விதிவிலக்கு- நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்

0
175
Article Top Ad

டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான நொவாக் ஜோகோவிச் கடந்தாண்டு டிசம்பர் 16ல் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அவரது வழக்கறிஞர்கள் அவுஸ்திரேலிய .நீதிமன்றத்திற்கு அளித்துள்ள சான்றுப்பத்திரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மைக்காலத்தில் அவர் தொற்றுக்குள்ளான காரணத்தினாலேயே தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் இருந்து விதிவிலக்குப் பெற்றதாக வழக்கறிஞர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனவரி 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக இவ்வாரம் வருமை மெல்பேர்ண் வருகை தந்த சேர்பியாவைச் சேர்ந்த நொவாக் ஜோகோவிச்சை அனுமதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்திருந்தது.

இதனை எதிர்த்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் தனது வழக்கறிஞர்கள் ஊடாக மேன்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கின் விசாரணை நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அவர் தற்போது குடிவரவுத்தடுப்பு நிலையமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஜோகோவிச் விவகாரம் உலகளவில் மிகவும் பரபரப்பாகவேப் படுவதுடன் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துநிலைப்பாடுகளுக்கு வழிகோலியுள்ளது.

முன்னைய செய்தியைப் பார்க்க

தடுப்பூசி செலுத்தாத டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கான விஸாவை ரத்துச் செய்த அவுஸ்திரேலியா திருப்பி அனுப்ப ஏற்பாடு