தேசிய வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பின் எதிரொலி: மூன்று கடும் விதிகளை உடன் நடைமுறைப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கட்

0
208
Article Top Ad

இலங்கை கிரிக்கட் வீரர்கள் அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்புக்களை விடுத்த நிலையில் ஒய்வுபெற்ற வீரர்கள் மற்றும் ஓய்வுபெற எண்ணியுள்ள வீரர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு அதிரடித்தீர்மானங்கள் மூன்றை எடுத்துள்ளது.

1.ஓய்வுபெற எண்ணியுள்ள தேசிய கிரிக்கட் வீரர்கள் மூன்று மாதகாலத்திற்கு முன்னரே ஓய்வுபெறும் எண்ணப்பாடு தொடர்பான அறிவித்தலை இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு வழங்கவேண்டும்

2. ஓய்வுபெறும் தேசிய கிரிக்கட் வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் ஐபிஎல் போன்ற கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக No Objection Certificate ‘ எவ்வித ஆட்சேபமும் இல்லை ‘ என்ற சான்றிதழை இலங்கை கிரிக்கட்டிடம் இருந்து பெற உத்தேசித்தால் அவர்கள் ஓய்வுபெற்ற தினத்தில் இருந்து ஆறுமாதங்களுக்கு பின்னரே அந்த சான்றிதழ் வழங்கப்படும்

3. ஒய்வுபெறும் தேசிய வீரர்க்ள எல்பிஎல் போன்ற தேசிய போட்டிகளில் விளையாடுவதென்றால் அவர்கள் அந்தப் போட்டிகளுக்கு முன்னதாக வரும் உள்ளுர் கிரிக்கட் பருவகாலத்தில் 80 சதவீதமான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்

இந்த மூன்று தீர்மானங்களும் உடனே அமுலுக்கு வருகின்றன என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள்ளாக உடற்தகுதிச் சோதனையின் கடுமை உட்பட பல காரணங்களை முன்னிறுத்தி இலங்கை அணியின் தேசிய வீரர்களான பானுக ராஜபக்ஷ தனுஷ்க குணதிலக்க ஆகியோர் தேசிய போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்புக்களை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது