குற்றப் புலனாய்வுத் திணைக்கள கட்டடத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை

0
451
Article Top Ad

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் 60 மில்லியன் ரூபா நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.