தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் நீடிப்பு – ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு

0
406
Article Top Ad

இந்தியாவின் தமிழ் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,

  • ஜனவரி 14 – 18 வரையான காலப்பகுதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
  • 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு
  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 வீதம் மாத்திரம் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்
  • தற்போது ஊரடங்கு காலங்களில் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய செயற்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்