வடக்கிற்கான புகையிரத சேவை 5 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது

0
212
Article Top Ad

அனுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத பாதையின் 120 கிலோமீட்டர் பகுதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.

இக் காலப்பகுதியில் அனைத்து புகையிரதங்களும் அனுராதபுரம் வரை மாத்திரமே இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த என இலங்கை புகையிரதத் திணைக்கள பேச்சாளர்,

92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நவீன தரத்திற்கு அமைவாக இந்தப் பகுதி மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது வடக்கு புகையிரத மார்க்கத்தில் மணிக்கு 80 கிமீ வேகக் கட்டுப்பாடுகளுடன் புகையிரதங்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள தடைகள் சீராக்கப்பட்ட பின்னர் புகையிரதங்கள் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் இயக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இது யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதங்கள் விரைவாக பயணிக்க உதவுவதோடு இது வடக்கு மாகாணத்தில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பான திறமையான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.