தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு – ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

0
132
Article Top Ad

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கடந்த புதன்கிழமை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிலியந்தலை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற வைத்தியரான அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஆயுதங்கள் மற்றும் கூரான ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முன்னதாக எம்பிலிப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட 65 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேலேயே கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்தகைது சம்பவம் முன்னெடுக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற வைத்தியர் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றிய பின்னர் குறித்த பகுதியில் உள்ள தனது தனியார் சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய சந்தேக நபர் வைத்தியரின் தனியார் சிகிச்சை நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்தததுடன், கைக்குண்டை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை வைத்தியரே வழங்கியுள்ளதாக சந்தேகநபர் விசாரணைகளின்போது தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நாரேஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதல் மாடியில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் ஓய்வுபெற்ற வைத்தியருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.