Article Top Ad
இங்கிலாந்தில் முகக்கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜோன்சன் வீட்டில் இருந்தவாறு பணிபிரியுமாறு ஊழியர்களை இனி அரசு அறிவுறுத்தாது என்றும் அவரவர் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சுய தனிமைப்படுத்தல்,கொரோனா ஹெல்த் பாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வரும் வாரம் முதல் பொது இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்