13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு – யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது வாகனப் பேரணி

0
673
Article Top Ad

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி நேற்று வெள்ளிக்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.

இந்த வாகனப் பேரணி நேற்றுக் காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.

இதன்போது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவைக் கோரி துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

வாகனப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் சட்டத்தரணிகளான ந.காண்டீபன் க.சுகாஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.