அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்ட்டி வென்றெடுத்துள்ளார்.
மெல்பேர்ணில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை டானியேலா கொலின்ஸை 6ற்கு 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ் பார்ட்டி முதலாவது செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் கொலின்ஸின் ஆதிக்கம் ஆரம்பத்திலிருந்து காணப்பட்டது ஒரு கட்டத்தில் 5ற்கு 1என கொலின்ஸ் முன்னணியில் இருந்தார்.
எனினும் கடுமையாக போராடி 6ற்கு 6 என புள்ளிகளைச் சமப்படுத்திய ஆஷ் பார்ட்டி டைபிரேக் சுற்றில் 7ற்கு 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றை 7ற்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலியர் என்ற பெருமைமிகு சாதனையை தனதாக்கினார் ஆஷ் பார்ட்டி.
இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமைமிகு சாதனையை தனதாக்கினார் ஆஷ் பார்ட்டி இதற்கு முன்னர் 1978ம் ஆண்டில் கிறிஸ் ஓ நீல் அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
2019ல் அமெரிக்க பகிரங்கப்பட்டத்தை வென்ற ஆஷ் பார்ட்டி 2021ல் விம்பிள்டன் பட்டத்தை வென்றெடுத்திருந்தார்.
தற்போது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஸ்டெபி கிராப் செரினா வில்லியம்ஸ் வரிசையில் புற்தரை கடினத்தரை மற்றும் களிமண்தரையில் சம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பார்ட்டி