எதிரணிகளின் பகல் கனவு ஒருபோதும் பழிக்கமாட்டாது! – அமைச்சர் மஹிந்தானந்த கூறுகின்றார்

0
163
Article Top Ad

“அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது.”

– இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால் அநுரகுமார திஸாநாயக்கதான் அடுத்த ஜனாதிபதி, ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித் பேசசு என்றெல்லாம் பதிவுகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டைச் சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்.

கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்” – என்றார்.