சர்வதேச விண்வெளி மையத்தைக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டம்!

0
440
Article Top Ad

சர்வதேச விண்வெளி மையத்தை 2031 ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வகம், பூமியிலிருந்து 227 கடல்மைல் தொலைவில் சுற்றி வருகின்றது.

இந்நிலையில் அதன் ஆயுட்காலம் முடிவடைந்ததும் விண்வெளி மையத்தை பசுபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறியுள்ள நாசா அதிகாரிகள், தெற்கு பசுபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியான பொயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் பகுதியில் சர்வதேச விண்வெளி மையத்தை விழவைப்பதே திட்டம் என்று கூறியுள்ளனர்.