உக்ரைன் எல்லைகளில் படையினரைக் குவிக்கும் ரஷ்யா – செயற்கைக்கோள் புகைப்படம் வெளியானது

0
311
Article Top Ad

உக்ரைன் நாட்டு எல்லைகளில், ரஷ்யா தனது படைகளையும், அதிநவீன போர்க்கருவிகளையும் நிலைநிறுத்தியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் நீண்டகாலமாக ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ஆனால், ரஷ்யாவுடன் இணைவதை விரும்பாத உக்ரைன் மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கம் காட்டி வருகிறது.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பிலும் உக்ரைனைச் சேர்க்க அமெரிக்கா முயற்சித்து வருகின்றது. இதனை சற்றும் விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில், தனது படைகளை அந்நாட்டு எல்லைகளில் நிலை நிறுத்தி வருகின்றது.

இலட்சக்கணக்கான இராணுவ வீரர்கள், பீரங்கிகள், ஏவுகணை அமைப்பு உள்ளிட்டவற்றை அமைத்துள்ளது. அத்தோடு, ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை ஒட்டிய உக்ரைன் எல்லையிலும் ரஷ்யாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.