குளிர்கால ஒலிம்பிக் தீபத்தை ரோபோ பரிமாறிக் கொள்ளும் காட்சி

0
166
Article Top Ad

ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக இரு ரோபோக்கள் நீருக்கு கீழ் ஒலிம்பிக் தீபத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சி சீனாவில் இடம்பெற்றது.

சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே இக்காட்சி இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்ற நிலையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் முழு உலகமும் எதிர்பார்த்துள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமாகியது.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கென உலகின் நாலாப் பகுதிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பீஜிங் நகருக்கு வருகை தருவதுடன் உலகின் ஒரு சில நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரச தலைவர்களும் வருகை தந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினும் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

ஒலிம்பிக் வளாகத்தில் ஒலிம்பிக் சுடர் ரோபோ ஒன்றுக்கு கையளிக்கப்பட்டதுடன் பின்னர் குறித்த ரோபோ யொங் டிங் ஆற்றில் மற்றுமொரு ரோபோவின் கையிலிருந்த ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற நடவடிக்கை எடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.

நீருக்கு கீழ் இவ்வாறு தீபத்தை ஏற்றுவதற்காக விசேட புகையற்ற சுற்றுப்புறச் சூழலொன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.