மியன்மாரில் இராணுவ ஆட்சி ஒரு வருடம் பூர்த்தி

0
158
Article Top Ad

மியன்மாரில் இராணுவ சூழ்ச்சியின் ஊடாக ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஒரு வருடம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் அங்கு இடம்பெறும் உள்நாட்டு மோதல்களை உலகம் வெறுமனே அவதானித்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வருடத்திற்குள் மியன்மார் மக்களுக்கு எதிரான பல்வேறு அடக்கு முறைகளையும் கொடூரங்களையும், அட்டூழியங்களையும் அதிகாரத்திலுள்ள இராணுவ ஆட்சியாளர்கள் அரகேற்றியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மீண்டும் நாட்டில் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் ஆன் சாங் சூச்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பாதுகாப்பு படை ஸ்தாபிக்கப்பட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் போது ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெறும் எண்ணிக்கையிலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.