நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 11 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

0
181
Article Top Ad

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய இழுவைப்படகுகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன. அதில் இருந்த 11 பேர் கைதுசெய்யப்பட்டு மயிலிட்டித் துறைமுகப் பகுதிக்குக்  கொண்டுவரப்பட்டு நேற்றுக் காலை யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நேற்று மதியம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.