கனடாவில் ஆர்ப்பாட்டத்தை கடுப்படுத்த நெருக்கடிநிலை

0
165
Article Top Ad

கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் கொவிட்-−19 கட்டுப்பாடுகளை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் தேசிய அளவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர் நிலையிலிருந்து ஆதரவுபெற நெருக்கடிநிலை அவசியம் என்று மேயர் ஜிம் வொட்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க–கனடிய எல்லையைக் கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்ற விதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படுகிறது. கனரக வாகன ஓட்டுநர்கள் தங்களின் வாகனங்களை வீதிகளில் நிறுத்திக் கூடாரமிட்டுள்ளனர்.

பொதுச் சுகாதார விதிகளுக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டமாகவும் அது உருவெடுத்துள்ளது.

தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயம் என்ற விதிமுறைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.