தமிழருக்கு நீதியை உறுதி செய்வது இலங்கையின் நலனுக்கு உகந்தது – ஜெய்சங்கர் வலியுறுத்தல்

0
223
Article Top Ad

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் என்பவற்றை உறுதி செய்வதே இலங்கையின் நலனுக்கு உகந்த விடயம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சு.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு இருநாள் சுற்றுப் பயணம் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தமிழருக்கான விடயங்களை உறுதி செய்வதற்கு அதிகாரப் பரவல் மிக முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அழுத்தமாகத் தெரிவித்தார் என்று அவரின் அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.