கத்தோலிக்க சமூகம் சர்வதேசத்தை நாடினால் வரும் விளைவுகளை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் எச்சரிக்கை

0
238
Article Top Ad

2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாகவும் திருப்திகொள்ளும் வகையிலும் இல்லை என கத்தோலிக்க சமூகம் விரக்தி கொண்டுள்ளது.

இந்தநிலையில் வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது.

குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்தோடு ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கடமைகள் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது அல்ல என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார்.