யாழ்ப்பாணத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் அறவிடப்படும்

0
425
Article Top Ad

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்வோர் தமது பயணத்தின் முன்பு மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையைத் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை இலங்கைப் பிரஜைகள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் இதற்கென 5 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தொகை உரிய முறையில் அரசாங்கத்தின் கணக்கில் வைப்பிலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இச் சேவையைப் பெற்றுக் கொள்வோர் எதிர்மறை (Negative) முடிவாயின் நேரடியாக விமான நிலையத்துக்கு செல்ல முடியும்.