யூனிஸ் புயல் – வடக்கு அயர்லாந்து- வேல்ஸ் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
154
Article Top Ad

யூனிஸ் புயல் வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸை கடுமையாகத் தாக்கியதால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.

வடக்கு அயர்லாந்து முழுவதும் வீசிய கடுமையான காற்றினால், விமானங்கள் மற்றும் கப்பல் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

லண்டன்டெரி கவுண்டியில் உள்ள க்ளென்ஷேன் வீதியில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு பல விபத்துக்கள் ஏற்பட்டன. மஞ்சள் வானிலை எச்சரிக்கை சனிக்கிழமை 09:00 மணி வரை இருக்கும்.

மரம் விழுந்ததில் அயர்லாந்து குடியரசில் ஒருவர் கொல்லப்பட்டார், ஆனால் நாட்டின் சில பகுதிகளில் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.

குடியரசில், முக்கியமாக கார்க், கெர்ரி மற்றும் கிளேரில் சுமார் 80,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, யூனிஸ் புயல் வேல்ஸைத் தாக்கிய பிறகு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளன மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளிக்கிழமையன்று பலத்த காற்று வீசியதால், லொரிகள் அடித்துச் செல்லப்பட்டன. வேல்ஸில் உள்ள இரண்டு பாலங்களும் மூடப்பட்டன. மேலும் கட்டடங்களின் கூரைகள் கிழிந்தன.

பெம்ப்ரோக்ஷயர் கடற்கரையில் மணிக்கு 92 மைல் (148 கிமீ-மணி) வேகத்தில் காற்று வீசியது.