பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் – பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நோர்வே

0
257
Article Top Ad

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்கப் பட்டியலில், நோர்வே முதலிடத்தில் உள்ளது.

14 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

ஜேர்மனி, 10 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, 8 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்களுடன் என மொத்தம் 21 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சீனா, 8 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

சுவீடன், 7 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஒஸ்திரியா, நெதர்லாந்து, சுவிஸ்லாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.