“ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மாநாட்டில் இலங்கைக்குக் களங்கம் ஏற்படாது என நாம் நம்புகின்றோம்.”
– இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஆரம்பத்தில் இருந்தே, குறித்த மாநாடு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டமைள்ளது.
எனினும், ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடப்படும்.
இந்தப் புகார்களுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் உரிய பதிலளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளார். இருப்பினும், இந்தப் புகார்களின் தன்மையைப் பார்க்கும்போது அவை எங்களைக் கடுமையாகப் பாதிக்காது.
ஜெனிவா மாநாட்டு அதிகாரிகள் இன்று இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள நிலைமையை உணர்ந்துள்ளனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர்ச்சூழல் இன்று பெரிய தலைப்பாக மாறியிருப்பதே காரணம்” – என்றார்.