சர்வதேசச் சந்தையில் அதிரடியாக எகிறிய மசகு எண்ணெய் விலை

0
146
Article Top Ad

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 14 வருடங்களுக்குப் பின்னர் 130 டொலராக உயர்வடைந்துள்ளது.

போர் காரணமாக மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

ரஷ்ய எண்ணெய் தடை குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று தெரிவித்திருந்தார். ரஷ்யா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கிறது என சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவிக்கின்றது.

ரஷ்யன் கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $200 ஆக உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.