Article Top Ad
ஒரு டொலருக்கு 230 ரூபாவை விஞ்சாத வகையில் நாணயமாற்று நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில், நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத் தன்மைய ஏற்படுத்த குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியானது உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து அதற்கேற்ப பொருத்தமான கொள்கை மாற்றங்களைச் செய்யும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.