பொருளாதார நெருக்கடி – இலங்கை எதிர்கொள்ள வேண்டிய 11 முக்கிய சவால்கள்

0
187
Article Top Ad

மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டிய 11 முக்கிய சவால்களை சிரேஷ்ட நிதியியல் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் எடுத்துரைத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக  இறையாண்மைக் கடன்களை செலுத்த முடியாது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட   லெபனானைப் போலவே பெரும்பாலான குணாதிசயங்கள் இலங்கையில் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சிரேஷ்ட நிதியியல் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ்

நிதியியல் துறை மற்றும் புலனாய்வு செய்திகளில் விசேட திறமை பெற்ற  நிதியியல் துறை மற்றும் புலனாய்வு செய்திகளில் விசேட திறமை பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் அடுத்து இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக எத்தகைய முக்கிய சவால்களை எதிர்நோக்கவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

அவர் முன்னிலைப்படுத்திய  முன்னிலைப்படுத்தப்பட்ட 11 முக்கிய சவால்கள் பின்வருமாறு

 

1- போக்குவரத்து, உணவு, அத்தியாவசியப் பொருட்கள், உரம் என அனைத்துச் செலவுகளும் உயரும்

2. வரும் மாதங்களில் பணவீக்கம் படிப்படியாக 23 சதவீதமாக உயரும்

3. ரூபாய் மதிப்பில் மக்கள் சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு குறையும். மக்கள் முன்பு பெற்ற சம்பளத்தில் செய்ய முடிந்தவற்றில் 60 % மானவற்றை மட்டுமே செய்யமுடியும்

4. இறக்குமதிகள் முன்னரை விட 40% அதிக செலவுமிக்கதாகக் காணப்படும்

5. அரசிடம்  சம்பள உயர்வைக் கேட்டு மக்கள் போராட்டம் நடத்துவதற்கு அதிக சாத்தியமுண்டு

6. ஊதிய உயர்வு வெளிநாட்டு நாணயத்தில் வழங்கப்பட்டாலே அன்றி உள்நாட்டு நாணயத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வால் பெரும் பலனேதும் ஏற்படவாய்ப்பில்லை

7. மின்சாரம், தண்ணீர் கட்டணம் ஆகக்குறைந்தது 40% உயர வாய்ப்புள்ளது.

8. விலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் வகிபாகம் அதனிடமிருந்து இல்லாமல் போகலாம்

9 மக்கள் தங்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடாதிருப்பதற்கு ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் மக்களைக் கவனச் சிதறலுக்குட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடலாம்

10. மென்மேலும் அதிகமான இளைஞர் யுவதிகள் புலம்பெயர வாய்ப்புண்டு. இதனால் இலங்கை அதன் பணியாளர் படையில் சிறப்பான பிரிவினரை இழக்கும் நிலை உருவாகும்

11. சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது சவாலானதாக இருக்கும்.