பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம்

0
602
Article Top Ad

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை அரசிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனர்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி – அறிவியல்நகர் வளாகத்திலும் மாணவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர்.