அரசாங்கம் பதவி விலகாது – போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை

0
177
Article Top Ad

நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகாது எனவும், அவர்கள் பதவி விலகும் வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.