யூனியர் உலகக் கோப்பை ஹொக்கி – கால் இறுதியில் இந்தியா – தென் கொரியா இன்று மோதல்

0
216
Article Top Ad

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்தியா-தென் கொரியா அணிகள் இன்று மோதுகின்றன.

15 அணிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் வேல்ஸ், ஜெர்மனி, மலேசியா ஆகிய அணிகளை வீழ்த்தி தனது பிரிவில் (டி) முதலிடம் பிடித்த இந்தியா கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. தென் கொரியா அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் (சி பிரிவு) 3 புள்ளிகள் பெற்றது. அந்த அணி கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் உருகுவே, ஆஸ்திரியாவை பின்னுக்கு தள்ளி தனது பிரிவில் 2-வது இடம் பெற்று தட்டுத்தடுமாறி தான் கால்இறுதிக்கு வந்திருக்கிறது.
எனவே தொடர்ச்சியாக வெற்றியை குவித்து சூப்பர் பார்மில் இருக்கும் இந்திய அணி, தென் கொரியாவுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து-தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-அமெரிக்கா, அர்ஜென்டினா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.