துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயற்சி – பிரிட்டன் குற்றச்சாட்டு

0
237
Article Top Ad

2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மால்டோவாவில் உள்ள அங்கீகரிக்கப்படாத டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியில் இருந்து ஆட்சேர்ப்பு முயற்சி இடம்பெறுவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மொஸ்கோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும் தமது துருப்புக்களில் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளது என கடந்த வாரம் கிரெம்ளின் ஊடக பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஒப்புக்கொண்டார்.

அந்தவகையில் 7,000 முதல் 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.