Article Top Ad
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, லங்கா ஐ.ஓ.சியின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 367 ரூபாய்,
யூரோ 3 பெற்றோல் ஒரு லீற்றர் – 347 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 327 ரூபாய்.