பிரபல பாடகி தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி

0
55
Article Top Ad

பிரபல பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி நியோமி ஜூட். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1946 ஆம் ஆண்டு பிறந்த நியோமி ஜூட் தனது 76 ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். பல ஆண்டுகளாக தீவிர மனரீதியிலான அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நியோமி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நியோமியின் தற்கொலை அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியோமியின் உயிரிழப்பிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.