பயங்கரமான சவாலை ஏற்றுள்ளேன் – உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை மீட்டெடுப்பேன் – பிரதமர்

0
454
Article Top Ad

 


” மிகவும் அபாயகரமான சவாலையே பொறுப்பேற்றுள்ளேன். கத்தி மேல் நடப்பதைவிடவும் இது பயங்கரமான சவாலாகும். ஆழம் தெரியவில்லை. அடிகூட தென்படவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடிகூட இல்லை.

” எனினும், குழந்தையை பாதுகாப்பாக அந்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன். எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல. முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.” எனப் பிரதமர் கூறினார்.

 

பிரதமரின் முழுமையான உரை