21வது திருத்தச் சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்பிப்பு

இரட்டை குடியுரிமை ரத்து ; புதிய இரண்டு ஆணைக்குழுக்கள் அறிமுகம்

0
182
Article Top Ad

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க தடை விதிக்கும் சரத்த்து உட்பட 19ஆவது திருத்தசட்டத்தின் முழுமையான விடயங்களை உள்வாங்கி 21வது திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டத்தரணி நிமல் சிறிபாலத சில்வா, விசேட சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பலர் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

21வது அரசியலமைப்பு திருத்தம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாற்பட்ட ஜனநாயக பண்புகளை உள்ளடக்கியதாகவும் உருவாக்கப்படுகிறது.

21வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மேலும் இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒன்று தணிக்கை சேவை ஆணைக்குழு மற்றது பிற செயலாக்க ஆணைக்குழுவாகும்.

அத்துடன், 21வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.

அரசுத் துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளைத் தடுக்கத் தேவையான அதிகாரம் புதிய இரண்டு ஆணையத்துக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.