தமிழக மக்கள் இலங்கைக்கு 2 பில்லியன் பெறுமதியான உதவி!

0
150
Article Top Ad
தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பகலே, கொழும்பு துறைமுகத்தில் வைத்து இலங்கை அரசாங்கத்திடம் வழங்கினார்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்தக்கப்பல் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது.
இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் 9000 மெட்ரிக் டொன் அரிசி, 50 மெட்ரிக் டொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டொன்களுக்கும் மேற்பட்ட 55 வகையான அத்தியாவசிய மருந்துகள், 2 வகையான சிறப்பு மருந்துகள் என்பன உள்ளடங்குகின்றன.
அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா, பிரதமரின் குழுவின் அங்கத்தவர்களான சாகல ரத்னாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.