பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் கைது!

0
172
Article Top Ad

பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் யூசி தலைவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மே 09ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகாமையில் உள்ள ‘மைனாகோகம’ மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க, மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரியசாத் உட்பட பல சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.