695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த 695 பில்லியன் ரூபாவை நடப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
அத்துடன் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் முன்வைத்த உள்நாட்டு இறைவரி சட்டம், பெறுமதிசேர் வரி சட்டம், தொலைத்தொடர்பு சட்டம், நிதிமுகாமைத்துவ சட்டம், பந்தய சூது சட்டம் போன்றவற்றை திருத்துவதற்கான யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது
இதன்படி, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டம், VAT வரி சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க தொலைத்தொடர்பு வரிச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என பிரதமர் முன்மொழிந்தார்.
2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட, விதிப்பனவுச் சட்டம், 1988 ஆம் ஆண்டு 40 ஆவது இலக்க நிதி மேலாண்மைச் சட்டத்தின் 2003 இன் 3 ஆம் பிரிவை மாற்றவும் பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.