சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்த 64 பேர் கைது

0
157
Article Top Ad

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.