மே 9 அன்று காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோ ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தலா 10 மில்லியன் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.