இலங்கைக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி!

0
183
Article Top Ad

இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
குறித்த நிதி உதவியில், 22 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் உலக உணவுத் திட்டத்திற்காகவும் மூன்று மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022/23 க்குள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மேலும் 23 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது