Article Top Ad
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன், இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை கடந்த திங்கள்கிழமை சந்தித்தபோது, இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இந்திய நிதியமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் “இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்” என்று இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் தொடர்வதற்கும், குறிப்பாக தற்போது தேவைப்படும் 65,000 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்காக இணக்கப்பாடு எட்டப்பட்டது.